மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதான வீதியில் ஞாயிற்றுக் கிழமை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்ததனர்.
டம்புல்லையிலிருந்து வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான போரூந்து ஒன்று எதிரே சென்ற முச்சக்கரவண்டி மீது மோதியதாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இவ்விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்;த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த, சி.நிசாந்தன், (26) ஆ.இருதயராசா(36) ஆகிய இருவரும், பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப் பட்டவர்களில் ஆ.இருதயராசா(36) என்பவரை மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment