24 Oct 2015

காட்டுக்குள் வீசப்பட்டுக்கிடந்த விநாயகர்

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி கிராமத்தில் உள்ள இத்தியடி விநாயகர் ஆலயத்தில் பிரதேச மக்களால் வழிபட்டு வந்த விநாயகர் உருவக் கல் விஷமிகளினால் வெள்ளிக் கிழமை இரவு திருடப்பட்டு பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வழக்கம் போல் குறித்த ஆலயத்திற்கு சனிக்கிழமை காலை விநாயகரை வழிபடச் சென்ற பொது மக்கள் சிலர் ஆலயத்தில் விநாயகர் சுவாமி உருவக் கல் இல்லாமல் காணப்பட்டுள்ளமையும்,
அங்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி உருவப்படங்கள் தூக்கி வீசப்பட்டும் ஆலயப் பொருட்;கள் சில காணாமல் போயுள்ளமை தொடர்பாக கண்ணுற்று ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து,
நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுவாமியின் உருவக் கல்லை தேடிய போது உருவக் கல்லானது ஆலயத்தின் அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் காணப்பட்டுள்ளது.
பின்னர் அதனை மீட்டு வாகனேரி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தற்போது மேற்படி ஆலயத்தில் சுவாமியின் உருவக் கல்லானது வைக்கப்பட்டுள்ளதால் பிராயச் சித்த பூஜை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த இத்தியடி ஆலயத்தின் கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த உருவக் கல்லை இத்தியடி ஆலயத்தில் வைத்து வணங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேற்படி உருவக் கல்லானது கடந்த வருடமும் இதே போன்று பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொதுமக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் பிராயச் சித்த பூஜை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே மேற்படி விடயம் அடிக்கடி இடம் பெறுவதனால் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டு குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பொலிசாரை கேட்டுக் கொண்டனர். 


SHARE

Author: verified_user

0 Comments: