திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் கிராமத்தில் பல நெடுங்காலமாக பாரிய கசுப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினரினால் பிடிக்கப்பட்டு சேருநுவர பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாதாக பிரதேச செலாளர் தெரிவித்தார்.
இதன் போது கலந்து கொண்ட மக்கள் குறித்த கிராமத்தில் கசுப்பு உற்பத்தியில் ஒருவர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சமூகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகள் உருவாகுவதாகவும் பிரதேச செயலாளரிடம் முறையிட்டனர் இதனை அடுத்து பிரதேச செயலாளர் தலைமையிலான, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிராமசேவை உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அடங்கிய குழுவினரே குறித்த நபரினை கசுப்புடன் பிடித்துள்ளனர்.
இதன் போது குறித்த நபரிடம் இருத்து 54 லீற்றர் கசுப்பு கைப்பற்றப் பட்டதாகவும் வருவதை அறிந்த உற்பத்தியாளர் மீதியினை மலசல கூடத்தினுள் ஊத்தியதாகவும் கைது செய்யப்பட்ட நபர் சேருநுவரு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பாக பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள கசுப்பு உற்பத்தியாளர் பல நெடுங்காலமாக பொலிசாரின் கண்ணில் சிக்காமல் உற்பத்தியினை மேற்கொண்டு வந்துள்ள நிலையிலையே இவர் பிரதேச செயலாளரிடம் சிக்கியுள்ளதாகவும். இதனால் தாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment