20 Oct 2015

பேஸ்புக் துஸ்பிரயோகங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ்

SHARE
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் ஊடாக இடம்பெறுகின்ற துஸ்பிரயோகங்களை நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளது.



இது தொடர்பில் இலங்கை நீதி ஆணைக்குழுவினால் தமக்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.



பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களின் ஊடாக தனிமனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் மற்றும் இழிவுப் படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.



இவ்வாறான விடயங்களை இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.



இதற்கான சட்டமூலம் தயாரிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: