ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய “மிதக்கும் கனவுகள்”நூல் வெளியீட்டு விழா (18-10-2015)ஞாயிற்றுக்கிழமை மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடை பெற்றது .ஓய்வூ பெற்ற கல்விப் பணிப்பாளர் மர்ஹ_ம் ஏ.எச்.எம்.மஜீட்; நினைவரங்கில் உதவிக் கல்விப் பணிப்பாளர் சத்தார் எம். பிர்தௌஸ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கலாநிதி ஏ.ஏ.முகம்மது நுபைல்,கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்
எழுத்தாளர்களான அலறி,விஜிலி,அறநிலா,மலரா,சுல்பிகாசரீப், கல்முனை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன், சோலைக்கிளி, கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் “மிதக்கும் கனவுகள்” கவிதைநூலைப் பற்றி உரையாற்றினர்கள். நூலின் முதல் பிரதியை கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் எஸ்.எம்.றபாய்டீன் வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரனிடமிருந்து பெற்றுக் கொண்டார் சிறப்புப் பிரதிகளை ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், ஹென்டி கெப் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்தியப் பொறுப்பாளர் ஏ.ஜி.கலீலுர் றகுமான், வாழ்வின் எழுச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோரும், மர்ஹ_ம் ஏ.எச்.எம்.மஜீட், நினைவுப் பிரதியை கல்முனை பிரதேசசெயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முகர்ரப்பும் பெற்றுக் கொண்டார்
0 Comments:
Post a Comment