பசுமையான நாட்டை உருவாக்குவோம்’ தொனிப்பொருளில் மரம் நடுகை மற்றும் கோழிக்குஞ்சுகளை வழங்குதல் நிகழ்வு கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இன்று (05.10.2015) பெரியநீலாவணை-01 வீட்டுத்தோட்ட சூழலில் நடைபெற்றது. மாகாணசபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளால் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதுடன் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளும் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், பிரதேச திவிநெகும அதிகாரி எஸ்.சிவம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment