அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலர் பிரிவில் உள்ள நெய்யன்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மை செய்கைக்காகச் சென்ற விவசாயி ஒருவர் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பலியானவர் சம்மாந்துறையைச் சேர்ந்த 30 வயதான எம்.எஸ்.முகம்மட் இர்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வழமைபோன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் வயலுக்குச் சென்றவேளை அங்கிருந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளார்
0 Comments:
Post a Comment