22 Oct 2015

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்: மட்டக்களப்பில் மூவர் தெரிவாகும் சாத்தியம்

SHARE
நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 03 இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக  ஒருவரும்,

காத்தான்குடி, ஏறாவூர் நகர், கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி மற்றுமொருவரும்,

மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு, மண்முனை தென்னெருவில்பற்று, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி மேலும் ஒருவரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் 28ஆம் திகதி ஒவ்வொரு பிரதே செயலகத்திலும் நடைபெறவுள்ளது.  
SHARE

Author: verified_user

0 Comments: