வேள்ட்விஸன் நிறுவனமும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அண்மையில் தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தது.
அத்தையல் இயந்திரங்களை கையாளுதல் தொடர்பிலான பயிற்சி வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களிலும் (23, 24) முனைக்காடு உக்டா சமூகவள நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து இதன்போது கலந்து கொண்டு பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.
0 Comments:
Post a Comment