கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தின் வாணி விழா நிகழ்வுகள் இன்று 21.10.2015 பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. பூசை வழிபாடுகளை கல்முனை
அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரவிஜீ நடாத்தியதோடு நற்சிந்தனையும் வழங்கினார்.
அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரவிஜீ நடாத்தியதோடு நற்சிந்தனையும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவிகளுக்கு பிரதேசசெயலாளர் கே.லவநாதன், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.கனேசமூர்த்தி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் பி.இராஜகுலேந்திரன், ஆகியோர் பரிசுகளை வழங்கிவைத்தனர். அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டமை நிகழ்வை சிறப்பித்தது.
.
0 Comments:
Post a Comment