(பழுவூரான்)
இலங்கை இளைஞர் தேசிய சேவைகள் மன்றத்தினரால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் 27வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்டத்திலான கூடைப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி தங்கப்பதக்த்தினை வென்றெடுத்து மட்டு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
கடந்த 23.10.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமான இப்போட்டியானது குருநாகல் சென் அனஸ் கல்லூரி மைதானத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் ஆண்களுக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினரும் யாழ்ப்பாண மாவட்ட அணியினரும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி பலப்பரீட்சை நடத்தியது. இதில் மட்டு மாவட்ட அணி யாழ்ப்பாண அணியினை 67-59 என்னும் புள்ளிகள் கணக்கில் மட்டு மாவட்ட அணி வெற்றிவாகை சூடியது.
இவ்வீரர்களை மட்டு மாவட்ட மக்கள் வாழ்த்துகின்றனர்.
0 Comments:
Post a Comment