8 Oct 2015

கிணறுகளில் ஊற்றெடுக்கும் வரை குடிநீர் வழங்கும் செயற்பாடு தொடரும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கியுள்ள இந்நிலையிலும்கூட மக்கள் மத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் நாளாந்தம் 53000 லீற்றர் குடிநீர் மக்களுக்கு வவுசர் மூலம் வழங்கி வருவதாக போரதீவுப் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச சபையினால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் தொடர்பில் புதன் கிழமை (07) காலை மேற்படி பிரதேச சபைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்….

வட கீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய பலத்த மழை இன்னும் இப்பகுதியில் பெய்யவில்லை, மக்கள் மத்தியில் தொடர்ந்து வரட்சி நிலவி வருகின்றது. இந்நிலையில் தமது குடிநீர் வழங்கும்  செய்ற்பாடு தொடர்வதாகவும், இப்பிரதேசத்திலுள்ள பலத்த மழை பெற்று கிணறுகளில் நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியதும் தமது குடிநீர் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்படும், எனவும், மேற்படி பிரதேச சபைச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: