மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி ஸ்ரீ இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இம்முறை தரம் ஐந்தாம் தரத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (13) செவ்வாக்கிழமை காலை வித்தியாலயத்தின் அதிபர் சு.நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.
நடந்துமுடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் தகுதிக்காக 63 மாணவர்கள் இருந்த போதும் பரீட்சையில் 52 மாணவர்கள் தோற்றி 13 மாணவர்கள் 70 புள்ளிக்குமேல் அத்துடன் 09 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும் 04 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் மாணவர்களின் பெற்றோர்களும் இதன்போது சிறந்த ஒத்துழைப்பை மேற்கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான நிகழ்வை விளாக்கேலமாக நடாத்தியிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் வைத்து மாணவர்கள் மற்றும் அதிதிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி பாண்ட வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் பாடசாலை வரைக்கும் கௌரமாக அழைத்துவரப்பட்டனர்.
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமின்றி ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் முதன்முறையாக கௌரவிக்கப்பட்டனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் கௌரவ நிகழ்வில் சித்தாண்டியில் நல்ல உள்ளம் கொண்ட பொதுமக்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் நினைவுச் சின்னங்கள் பணப் பரிசில்கள் என்பனவற்றை வழங்கிவைத்தனர்.
குறித்த நான்கு மாணவர்களுக்கும் ஆசிரியையினால் வங்கி கணக்கில் வைப்பில் இடுவதற்காக பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அத்துடன் நான்கு மாணவர்களினால் திருமதி வா.கணேசானந்தம் ஆசிரியர் அவர்களுக்கு கௌரவ பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு கல்குடா வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் (முகாமைத்துவம்) தினகரன்.ரவி மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்
0 Comments:
Post a Comment