இலங்கை தொடர்பில் பேசப்படும் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பிலும் கடந்த யுத்த காலத்திலும், தற்போதைய நிலையிலும், வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர் கொண்டு வரும் சவால்கள் மற்றும், இன்னோரன்ன செயற்பாடுகள் தொடர்பிலும் இம்முறை ஜெனிவா அமர்வில் வடகிழக்கிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று தமது மக்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன், மற்றும், மாகாண சபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் மற்றும் கே.சிவாஜிலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
எமது மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளுக்கு, சர்வதேச விசாரணை தேவை, வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை, போன்ற தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் தாம் ஜெனிவா அமர்வில் முன்வைத்துள்ளதாக இதன்போது கலந்து கொண்டுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment