மட்டக்களப்பு திக்கோடை 40ம் கிராமம் 4ம் வட்டார பிரதான வீதி கடந்த 5 வருடங்களாக மழை காலங்களில் சேதமடைவதும் பின்னர் அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்வது வழக்கம். இருந்த போதிலும் கடந்த 2014.11.25 காலப்பகுதிகளில் பெய்த அடைமழையினால் முற்றக சேதமடைந்தது.
இவ்விடையம் தொடர்பில் அக்கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் இதுவரையில் இதற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என தமது ஆதங்கத்தினைத் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் உரிய இடத்திற்கு பின்னர் வருகைதந்த அதிகாரிகள் வீதியினைப் பார்வையிட்டடனர். அப்போது அவ் இடத்திற்கு விரைந்த மக்கள் அதிகாரிகளை பாத்து நாங்கள் படும் கஸ்ரம் உங்களுக்கு தெரியவில்லையா இதனை எப்போது எங்களுக்கு புனரமைப்பு செய்து தருவீர்கள் என்று மக்கள் கேட்ட போது அதற்கு வருகைதந்த அதிகாரிகள் மக்களிடம் தகுந்த பதிலளிக்காமல் சென்றனர்.
அரசாங்கம் அதிகாரிகளை நியமித்ததன் நோக்கம் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குதல், அவர்களின் குறைபாடுகளை அறிந்து அதற்கான உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்தல் என்பனவாகும் இருந்தபோதிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது இப்பகுதி மக்களின் இக்குறைபாட்டை நிவர்தி செய்ய துரிதகதியில் செயற்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்திருக்கின்றனர்.
0 Comments:
Post a Comment