புரிந்துணர்வு நல்லிணக்க அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கையினை நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் மேற்;கொள்வதன் மூலமாகவே அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை
வெளிப்படுத்தப்படும். யுத்தம் நடைபெற்ற சந்தர்பத்தில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப் பட்டிருக்கலாம் ஆனால் யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் எதுவிதமான விசாரணைகளும் இல்லாத நிலையில் பலர் சிறைவாசம் இருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சா. வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை (24) நடைபெற்ற கலாசார நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்…..
அரசாங்கத்துடன் கைதிகளின் விடுதலை தொடப்பாக பேசியிருக்கின்றோம், எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் தனது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்த வேண்டும். இல்லாது போனால் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள், கடந்த கால அரசாங்கத்தினால் அரசியல் கைதிகள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டுள்ளனர், ஆனால் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் மீது தற்போது அரசியல் கைதிகளுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதலாவது கவனஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தையும், அரசியல் கைதிகள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.
பல வருட காலங்களாக சிறைத் தண்டனையில் எதுவிதமான விசாரணைகளும் இல்லாத நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் அனுபவிப்பதனால் அவர்களின் குடும்பப் பொருளாதார நிலைமைகள் பிள்ளைகளின் கல்வி நிலை பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. நல்லாட்சி எனும் போர்வையில் தொடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளமையினை ஏற்றுக் கொள்ள முடியாது.
மனிதனை சமய ஒழுக்க விழுமியங்கள் நல்வழிப்படுத்துகின்ற நிலையிலும் நாம் சமய அறநெறிகளிலிருந்து விடுபடுகின்றோம். இவ்வாறான நிலைமைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். சமயங்களினூடாக கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் .அப்போதுதான் நாம் முழுநிறைவான மனித நேயம் உள்ளவர்களாக மாற முடியும். இதற்கான செயற்பாடுகளை எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டும்.எனக் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment