24 Oct 2015

ஒவ்வொருவரும் தமது வீடுகளில் வீட்டுத் தோட்டத்தினை பேணல் சிறந்தது

SHARE
திருகோணமலை மாவட்ட விவசாய குழுக்கூட்டம் நேற்று (22) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு குடும்பமும் தமக்கு தேவையான உணவுப்பொருட்களை தமது வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்யக்கூடியவாறு செயற்படல் வேண்டும் என்றும் இதன் மூலம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதியின் முக்கிய எதிர்பார்ப்புக்களில் ஒன்றாக உப உணவுப்பயிர் உற்பத்தி காணப்படுவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் இதன் போது குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய உணவுற்பத்தி வேலைத்திட்டத்திற்கமைய திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய உப உணவுப்பயிர்களின் உற்பத்தியளவு தொடர்பாக சகல தரப்பினரதும் ஆலோனைகளைப் பெற்று பிரதேச செயலக ரீதீயாக குறித்த திட்டத்தை தயாரிக்குமாறும் இதன் மூலம் சிறப்பான முறையில் உணவுற்பத்தி வேலைத்திட்டத்தனை மாவட்டத்தில் மேற்கொள்ள முடியுமென்று அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் விவசாயத்தோடு தொடர்புபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் மற்றும் போக்குகள் பற்றி இதன் போது அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன் விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் ஆக்கபூர்வமான பதில்களை தெரிவித்ததுடன் சில பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிய குறித்த பிரதேசங்களுக்கு வருகை தருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ் விவசாயக்கூட்டம் சுமார் நான்கரை மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றதுடன் விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை கூறுவதற்கு அனைவரிற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. தமது பிரச்சினைகளை துணிந்து கூறுவதற்கு கடந்த காலங்களில் முடியாது போனதாகவும் குறிப்பாக தமக்கு பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றிகளை விவசாயிகள் அரசாங்க அதிபரிற்கு தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நீரப்பாசனப் பணிப்பாளர் பெறியியலாளர் ஜுனைட், திருகோணமலை மாவட்ட செயலக விவசாயப் பணிப்பாளர் உபாலி ராஜபக்ச, மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,  பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
SHARE

Author: verified_user

0 Comments: