தெரிவு செய்யப்பட்ட இரண்டு கால்நடை பண்ணையாளர்களுக்கு, தலா ஒவ்வொரு நல்லின காளைமாடு வீதம், இரண்டு காளை மாடுகள், விலைக் கழிவுடன் சனிக்கிழமை (24) வழங்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.தெ.சிவபாதம் தெரிவித்தார்.
தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அலுவலகத்தின் உதவியுடன் 30000 ரூபாய் பெறுமதியான ஒருகாளை 20000 ரூபாய் விலைக்கழிவுடன், 10000 ரூபாய்க்கு பண்ணையாகளர்களுக்கு, வழங்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் நல்லினப் கறவைப் பசுக்களை இனவிருத்தி செய்யும் நோக்குடன் கால்நடைப் பண்ணையாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இக்காளை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது தும்பங்கேணி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.ருஷியந்தன், மற்றும், போரதீவுப்பற்றுப் பிரதேச கால்நடை அபிவிருத்திச் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment