முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு மாத்திரமன்றி இலங்கையர் அனைவருக்கும் பாரிய இழப்பாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காதர் அஹாஜியார் மறைவு குறித்து முதலமைச்சர் கூறியதாவது….
அரசியலிலேயே ஹாதர் ஹாஜியார் பல்வேறு முத்திரைகளைப் பதித்துள்ளார். சமூக சேவையில் நாட்டம் கொண்டுள்ள அவர் ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக வாரிவழங்கிய கொடை வள்ளல் தமிழ்இ சிங்களஇ முஸ்லிம்கள் அனைவரின் நன்மதிப்பையும் பெற்ற அவர் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டவர்இ போற்றப்பட்டவர்.
முஸ்லிங்களின் வாக்குகள் மாத்திரமன்றி சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்று தொடர்ச்சியாக பாராளுமன்றம் சென்றவர். பலமுறை மக்கா புனித மாநகருக்குச் சென்று ஹஜ்கடமைகளை நிறைவேற்றியவர்.
அவர் அரசியல் வாதியாக மட்டுமன்றி மனித பண்பாளராகவும் இருந்து வாழ்ந்தவர்..
அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று தனது அநுதாபச் செய்தியில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment