22 Oct 2015

பொலன்னறுவை தொழிற்சாலைக்கான அமெரிக்காவின் உதவி உள் ளுர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கின்றது.

SHARE
பொலன்னறுவை தொழிற்சாலைக்கான அமெரிக்காவின் உதவி உள்@ர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கின்றது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் கலெல்லவில் உள்ள ஆல்போகஸ் தனியார் நிறுவனத்திற்கு (All Focus (Pvt.) Ltdஅண்மையில் விஜயம் செய்து, பொலன்னறுவையில் வேலைவாய்ப்புகளை வெற்றிகரமாக அதிகரித்தமைக்காக குறிப்பிட்ட நிறுவனத்தின் முகாமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாராட்டினார். புதிய வசதிகளும் சாதானங்களும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பிற்கும் (USAIDஇலங்கையின் தனியார் வர்த்தகங்களிற்கும் இடையிலான புதுமையான ஓத்துழைப்பின் ஓரு பகுதியாக அமைந்துள்ளன. 2011 ஆம்ஆண்டு முதல் (USAID  இலங்கை முழுவதிலும் இவ்வாறான ஓத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கு 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 3.1 பில்லியன் இலங்கை ரூபாய்) வரை வழங்கியுள்ளது. என அமெரிக்க தூதுவராலயம் வியாழக்கிழமை (22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அந்த அறிக்iயில்  மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது…

இலங்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் அமெரிக்கா எப்போதும் புதிய வழிகளைத் தேடி வருகின்றது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கேஷப் தெரிவித்தார், “பொலன்னறுவையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான முதலீடுகள் ஓரு நிறுவனத்தின் ஊழியர்களிற்கு மாத்திரம் உதவவில்லை, மாறாக அவை அந்த சமூகத்தின் ஏனையவர்த்தகங்களிற்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன” என அவர் தெரிவித்தார். 

ருளுயுஐனு ன் வெகா/பிஸ்+திட்டத்தில் பங்கேற்கும் 35 நிறுவனங்களில் ஆல்போகசும் ஓன்று, இந்த நிறுவனங்கள் (USAIDன் நிதி, முகாமைத்துவ மற்றும் நடவடிக்கை ஆதரவை பெறுவதற்காக சமஅளவிலான நிதியை முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டம் ஏற்கனவே 4,607 நேரடி வேலைவாய்ப்புகளையும், 9,832 மறைமுக வேலைவாய்ப்புகளையும் இலங்கையின் பல சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

நாளொன்றிற்கு 6000 கிலோ அரிசி மாவை உற்பத்தி செய்யக் கூடிய நவீன அரிசி ஆலையொன்றை நிறுவியதன் மூலம் கலெல்ல என்ற பகுதியில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த மக்களை ஆல்போகசுடனான ஒத்துழைப்பு பலப்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் 30 பேர் பணிபுரிகின்றனர். உயர்தரத்திலான உற்பத்திகளை மேற்கொள்வதன் மூலம் விநியோக மற்றும் விற்பனை வட்டத்திற்குள் வரும் 60 சிறிய ஆலைகள் மற்றும் உள்ளுர் நெல் உற்பத்தியாளர்களிற்கும் நிறுவனம் மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.


SHARE

Author: verified_user

0 Comments: