25 Oct 2015

களுவாஞ்சிகுடி மணல் வீதி அடைமழை காரணமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தடங்கல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி மணல் வீதியானது ஞாயிற்றுக் கிழமை(25) பெய்த அடைமழை காரணமாக  வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்பட்டள்ளதாக பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்
களுவாஞ்சிகுடி பிரதான வீதிக்கு அடுத்ததாக காணப்படும் குறித்த வீதி பன்நெடுங்காலமாக திருத்தப்படாமல் குன்றும் குளியுமாக காணப்படுகின்றது. மழைகாரணமாக வருடாவருடம் வெள்ளத்தில் மூழ்குவது வழமையாகியுள்ளது. களுவாஞ்சிகுடியை பொறுத்தளவில் மிகவும் கூடுதலாக மக்களும், வாகனமும் பிரயாணம் செய்யும் முக்கியமான இவ்வீதியானது திருத்தப்படாமல் காணப்படுவதனையிட்டு கவலையடைவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்திடம் இவ்வீதியின் நிலமை தொடர்பில்  கேட்டபோது…

இவ் வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது களுவாஞ்சிகுடியைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான வீதி என்பதனால் திருத்தி அமைக்கபபட வேண்டும் என வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு பல தடவைகள் நான் அறிவித்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

இவ்வீதியை துரிதமாக திருத்தி அமைக்கப்படா விட்டால் இம்முறை மழைகாலங்களில் குறித்த வீதியானது வெள்ளத்தில் மூழ்கி முற்றாக போக்குவரத்து தடையேற்படும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லையென பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: