மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான தாந்தாமலை நெல்லிக்காட்டுப்பகுதியில் காட்டுயானைகள் தாக்கி இளம் தம்பதிகள் பரிதாப மரணமாகியுள்ளனர். இன்று அதிகாலை கிராமத்திற்குள் புகுந்த யானை வீடொன்றை முழுமையாக தாக்கி விட்டு இவர்கள் வசித்து வந்த குடிசையையும் தாக்கி விட்டு இவர்களை காலால் மிதித்து முழுமையாக தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் கொக்கடிச்சோலையை பிறப்பிடமாகக் கொண்ட சுயமலர்(17) மற்றும் மோகனதாஸ் ஆகிய இருவரையுமே இவ்வாறு தாக்கியுள்ளது. இவர்கள் திருமணம் செய்து பத்து மாதங்களே கடந்துள்ள நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளது. இதை அறிந்த தாந்தாமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு மக்களை இக்காட்டு யானைகள் தாக்கி அழித்தால் எவ்வாறு நாங்கள் பயமின்றி வாழ்வது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இது குறித்து இதிகாரிகள் அக்கறை செலுத்துவார்கள் என்ற கேள்வியும் மக்களிடையே காணப்படுகின்றது. இவ்வாறானதொரு சம்பவம் கடந்த மாதம் மட்டு திக்கோடையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment