கல்குடா கல்வி வலய நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயம் நாடாத்திய முத்தாரம் கலை நிகழ்வு மட்/ககு/செங்கலடி மத்திய கல்லுாரி மண்டபத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் சனிக்கிழமை (17) நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு வேல்ட்விசன் லங்கா நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.இந்நிகழ்விற்கு பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதிந.புள்ளநாயகம் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் க.பாஸ்க்கரன் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இவர்களுடன் கல்குடா வலயத்தின் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி பி.இளங்கோ முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி க.தவராஜரெட்ணம் வேல்ட்விசன் லங்கா நிறுவனத்தின் வலய முகாமையாளர் அலெக்ஸ் பெஞ்சமின் செங்கலடி பிரதேச முகாமையாளர் ஜீ.ஏ.சுரேஸ் வாகரை பிரதேச முகாமையாளர் திரு பொனி வின்சன்ட் மற்றும் கிரான் பிரதேச கல்விக்கான இணைப்பாளர் திருமதி கவிதா ஆகியோர் அழைப்பதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கல்குடா கல்வி வலய பாடசாலைகளின் கலை இலக்கிய நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன. இந் நிகழ்வுகளை கல்குடா கல்வி வலய நலன்புரிச்சங்கம் நெறிப்படுத்தியிருந்தது.
0 Comments:
Post a Comment