வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் இடைவிலகல் தொகை குறைவடைந்து தொடச்சியாக பாடசாலைக்கு வருகைதரும் நிலை தற்போது உருவாகியுள்ளதென மாவடிச்சேனை அ.த.க. பாடசாலையின் அதிபர் இ.சச்சிதானந்தம் தெரிவித்தார்.
பாடசாலையில் இடம் பெற்ற வாணிவிழா நிகழ்வின் தலைமை தாங்கி நடாத்தி தலைமையுரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
எமது பிரதேசத்தில் இடைவிலகல் மாவணர்களின் தொகை அதிகரித்த வண்ணமாக இருந்தது இதனை எவரும் பொருட்படுத்தாத நிலை இப் பிரதேசத்தில் காணப்பட்டது உதாரணமாக நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பலதரப்பட்ட வீதியோர வியாபாரங்களில் ஈடுபட்டு வந்திருந்தனர். இதற்கு பெற்றோர் உட்பட அனைவருமே காரணமாக இருந்துள்ளனர் மாணவர்கள் சிறு வயதிலே தொழில் ஈடுபட்டிருந்த வேளை பெற்றார்கள் வருமானத்தை கருத்தில் எடுத்து செயற்பட்டனரே தவிர பிள்ளளைகளின் எதிர்கால கல்வியில் கவனம் செலுத்தவில்லை. இந் நிலை தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் அண்மைக்காலமாக புதிய வெருகல் பிரதேச செயலாளர் உட்பட செயலாக சிறுவர் நன்நடத்தை பிரிவு எடுத்த பாரிய முயற்சியினால் இடைவிலகல் தடுக்கப்பட்டு இடையிடையே வருகைதந்த மாணவர்களும் தொடர்ச்சியாக பாடசாலைக்கு வருகைதந்து கல்வி கற்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதற்காக பெற்றொர்கள் வழிப்படுத்தப்பட்டள்ளார்கள் இதற்காக பிரதேச செயலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
வாணிவிழா நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார் இதன்போது பிரதேச செயலாளரின் செயற்பாட்டினை பாராட்டி பாடசாலை கல்விச் சமூகத்தினால் பொண்ணாடை பேர்த்தி கொளரவிக்கப்பட்டது……
0 Comments:
Post a Comment