30 Oct 2015

முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் அடங்கிப்போனாராம் பிரதி அமைச்சர் அமீர் அலி

SHARE



புதன்கிழமை (28) கல்குடாத் தொகுதியில் உள்ள பல பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் இருந்து தளபாடங்கள் பிரதியெடுக்கும் இயந்திரம் காரியாலப் பொருட்கள் ஒலிபெருக்கி சாதனங்கள் ஆகியவை வழங்கலும் தொழிநுற்பக் கட்டிடம் திறப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட இந்நிகழ்வைக் கேழ்வியுற்ற பிரதியமைச்சர் அமீர் அலி தனது ஆதரவாளர்களுடன் குறிப்பிட்ட பாடசாலைகளுக்குள் அத்துமீறி உள் நுளைந்து நான் மத்திய அரசாங்கத்தில் உள்ளவன் நானே இதனை திறக்க வேண்டும் என்று அரச சுற்றறிக்கையை மீறி நடந்து கொள்ள முயற்சித்த வேளையில் பாடசாலை அதிபர்கள் மறுத்தும்  ஆனால் அதிபர்கள் ஆசிரியர்கள் மறுத்தாலும் நான் தான் திறக்க வேண்டும் என்று தனிமையில் சென்று திறந்துவிட்டு முதலமைச்சர் வருமுன்னே அங்கிருந்து சென்று விட்டார்.

என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் வியாழக் கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

முதலமைச்சரின் நிகழ்வுகளாக தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு பிரதியெடுக்கும் இயந்திரம் வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வாழைச்சேனை அந்நூர் மஹா வித்தியாலயத்திற்கு காரியாலய தளபாடங்கள் ஓட்டமாவடி ஸாஹிரா வித்த்டியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மத்திய கல்லூரியில் பயிற்ச்சி நிலையம் திறக்கவும் மீராவோடை ஹிதாயா மகாவித்தியாலயத்தில் பயிற்ச்சி நிலையம்திறக்கவும்ஆகிய பாடசாலைகளில் குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் அவ்வூர் மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடந்து முடிந்தன.

தன்னை விட வேறு எந்த அரசியல்வாதியும் ஊருக்குள் உள்ளே வரக்கூடாது என்று தன் ஆதரவாளர்களை ஏவி விட்டு புதினம் பார்க்க நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை கல்குடா மக்களையே வியப்புக்குள் ஆழ்த்தியது. 

முதலமைச்சர் வருவதனைத் தடுக்க நினைத்து ஹர்த்தால் கடையடைப்பு என்றெல்லாம் பகிரப்பட்ட துண்டுப்பிரசுரம் அனைத்தும் பிரதி அமைச்சருக்கு எதிராகத் திரும்பி முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை வரவேற்றமை பிரதி அமைச்சருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் மட்டக்களப்பு மத்திய வலய கல்விப்பணிப்பாளர் சேகு அலி ஆகியோருடன் கல்வி அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்தாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: