மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை (25) காண்டுயானையின் தாக்குதலால் வீடொன்று சேதமாக்கப்பட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
கணவனும் மனைவியும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கு அருகாமையில் யானையின் நடமாட்டத்தினை அவதானித நிலையில் வீட்டை விட்டு சடுதியாக வெளியேறியுள்ளனர்.
இதன் பின்னர் யானை வீட்டின் சுவாமி அறையினை முற்றாக சேதமாக்கி சென்றுள்ளதாக அவதானக் குறைவாக இருந்திருந்தால் நாம் இரண்டு போரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காக நேரிட்டிருக்கும் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வீட்டின் சுவாமி அறை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது தற்பொழு மழைகாரணமாக இருப்பிடத்திற்கான வசதிகளை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பிரதேச செயலாளரிடம் அறிவித்துள்ளதாக கிரம சேவை உத்தியோகத்தர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment