மகிழடித்தீவு பொது வைத்தியசாலையும் உக்டா நிறுவனமும் இணைந்து மருத்துவ வசதியற்ற மாவடிமுன்மாரி கிராமத்தில் இலவச மருத்துவ முகாமினை நேற்று (25) நடத்தியது.
வருகின்ற காலப்பகுதி மழைகாலம் என்பதினால் பலநோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதினை கருத்தில் கொண்டு இவ்விலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில் பனிச்சையடிமுன்மாரி மாவடிமுன்மாரி போன்ற கிராமங்களினை சேர்ந்த மக்கள் கலந்து தங்களுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக் கொண்டதுடன்இ போசாக்கு குறைவான பிள்ளைகளும் இதன் போது இனங்காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment