30 Oct 2015

தழிழர், சிங்களவர், முஸ்லிங்கள் என்று சண்டைபிடித்த காலம் மலையேறவிட்டது – பிரதியமைச்சர் அமீரலி

SHARE
நாங்கள் தழிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிங்கள் என சண்டைபிடித்த காலம் மலையேறவிட்டது. தற்போது இனத்தை வைத்து, துவேசத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் காணால் போகின்ற காலத்தில்தான் நாங்கள் இங்கு வந்து நிகழ்வில் பங்கேற்கின்றோம்.
இலங்கையில் யார் யாரெல்லாம் துவேசரீதியாக பேசினார்களோ அவர்களெல்லாம் தேசியத்தில் புறந்தள்ளப் பட்டிருக்கின்றார்கள். என கிராமிய அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மீனவர் வாடிவீடு இன்று வெள்ளிக் கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு வாடிவீடுட்டைத் திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

கடந்த காலத்தில் சிங்களவாத்தை வைத்துக் கொண்டுபேசிய பொதுபலசேனா, ஜாதிக்க ஹெல உறுமைய, போன்றோர்கள் அவர்களது வாயை அடக்கிக் கொண்டு அவர்களது அரசியலை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். எனவே இந்த நல்லாட்சியில் யாரும் இனவாதம்பேச முடியாது என பலரும் அறிந்திருக்கின்றார்கள். 

நடை பெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேரத்தலில் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூரத்திக்கு பட்டிருப்புத் தொகுதிச் சமூகம் உரிய ஆதரவைத் தெரிவிக்க வில்லை என்ற கவலை என்னிடத்தில் உள்ளது. 

வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தழிழனாக இருக்க வேண்டுமென்று தொடர்ந்து பலர் பேசிவந்த போதிலும், அனைத்தையும், பூச்சியத்தால் பெருக்கியுள்ள சமூகமாக வடகிழக்கிலுள்ள தமிழ் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 

மாறாக முஸ்லிங்கள் தழிழர்கழிடமிருந்துதான் அரசியரலைக் கற்றவர்கள். ஆனால் முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்தும் தற்போது மிளிர்கின்றன ஆட்சியில் எந்த அரசு வந்தலும் அந்த அரசாங்கத்தின் பக்கம் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து கொண்டு அவர்களது சமூகத்தையும், அவர்களது பிரதேசங்களையும் அபிவிருதி செய்துவிட்டுச் செல்கின்றார்கள் இதனால் முஸ்லிம் அரசியல் வாதிகளைவிட முலிலிம் மக்கள் வெற்றிகண்டு விடுகின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இன்னும் எத்தனை எத்தனையோ அபிவிருதி வேலைத் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூரத்தியை பட்டிருப்புத் தொகுதி மக்கள் வெற்றிபெறச் செய்திருந்தால் பட்டிருப்புத் தொகுதிக்கு பல கோடிக்கணக்கான பணம் அபிவிருத்திக்காக கொண்டு வரப்பட்டிருக்கும்.

எனவே நான் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற போதங்களை மறந்து அரசியல் மேற்கொள்ளும் ஒரு சாணக்கியமான அரசியல்வாதி. எந்த மக்களுக்கு என்ன தேவை ஏற்படுகின்றதோ அதனை நான் பூர்தி செய்து கொடுக்கப் பின்னிப்பதில்லை. 

எனது ஊருக்கு மாநாட்டு மண்டபம் கடடுவதற்கு ஒதுக்கீடு செய்த 90 லெட்சம் ரூபாய் நிதியை களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பிடம் நிருமாணிப்பதற்கு வழங்கியுள்ளேன். இவ்வாறுதான் எனது அரசியல் மேற்கொண்டு வருகின்றேன்.

கடந்த 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் மட்டக்களப்பு மாட்டத்தில் தமிழர்களும், முஸ்லிங்களும். எவ்வாறு உறவாக வாழ்ந்தார்களோ, அவ்வாறு மீண்டும் இந்த நல்லாட்சியில் வாழத் தொடங்கியுள்ளோம். 

கடந்த கால கசப்பான விடையங்கள் அனைத்தையும் தமிழ்ர்களும் முஸ்லிங்களும், மறந்துவிட்டு புத்துணர்வுடன் வாழவேண்டும்.  எனக்கு அனைத்து சமூகத்தையும், சமமாக மதிக்வேண்டிய தார்மிக பொறுப்பு உள்ளது. 

வறுமையக் காரணம் காட்டி குழந்தைகளின் கற்றலை நிறுத்தி விடக்கூடாது. மட்டக்களப்பு மாட்டம் அதிகளவு மதுபாவனையுள்ள மாவட்டமாகவுள்ளது. என்ற ஒரு அருவருப்பான செய்தியும், பேசப்படுகின்றபோது நாம் கூனிக் குறுகியுள்ளோம். இவற்றிலிருந்து தமிழ் சமூகம் விழிப்படைய வேண்டும்.  எதிர்கால சந்ததியினர் மிகவும் மோசமாக மதுபோதைக்கு அடிபணிய வேண்டிய சமூகமாக மாற்றியமைக்க யாரும் முயற்சிக்க வேண்டாம்.  எனத் தெரிவித்த மேற்படி பிரதியமைச்சர்…..

கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகளவு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கிழக்கு மாகாணசபைக்கு உண்டு இவற்றைச் செய்யாத கிழக்கு மாகாணசபை தேவைதான என்ற எண்ணமும் சிந்தனையும் தற்போது எமக்கு எழுந்துள்ளது. 

திருமண வீடு என்றால் நானே மாப்பிள்ளையாகவும், மரணவீடு என்றால் நானே இறந்த உடலாகவும், இருக்க வேண்டும் என்ற அரசியலை கிழக்கு மாகாணத்திலுள்ள அரசியல் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றதானது கவலைக்குரியதும், அவர்கள் அரசியல் முதுர்ச்சி இல்லை என்பதையுமே காட்டி நிற்கின்றன. 

எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் அம்மாகாணசiயிலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரம் இருக்கின்றது என்ற இறுமாப்போடு பேசகின்ற விடையங்களுக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். எனவே எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபை மிகவும் திறம்படஇயங்க வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: