18 Oct 2015

நவம்பர் 7 இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல்

SHARE
இளைஞர்களை ஆளுமையுள்ள இளைஞர் சக்தியாக மாற்று வதற்காக புதிய வேலைத்திட்டங்களுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பட்டு வருகின்றது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
(18.10.2015) ஞாயிற்றுக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த உதவிப்பணிப்பாளர் நைறூஸ் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் மாதம்(நவம்பர்) 7ம் திகதி நடைபெறவுள்ளது.
இளைஞர்களை ஆளுமையுள்ள இளைஞர் சக்தியாக மாற்று வதற்காக புதிய வேலைத்திட்டங்களுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இம்முறை நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொகுதிரீதியாக நடைபெறவுள்ளது. இதற்காக எதிர் வரும் 28ம் திகதி நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளை உள்ளடக்கி இரண்டு தமிழ் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தெரிவு செய்யுமாறு நாங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு பரிந்துரைகளை செய்துள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒரு பிரதேசத்திற்கு ஒரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தெரிவு செய்தனர். ஆனால் இம் முறை அவ்வாறில்லாமல் 225 உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் பாராளுமன்றத்திற்கு தொகுதி அடிப்படையில் 160 தொகுதிகளுக்கும் 160 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் அடிப்படையிலும் மிகுதியாகவுள்ளவர்கள் போனஸ் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவ தலைவர்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசிலும், மாற்றுத்திறணாளியான இளைஞர்கள், சட்டத்துறை மாணவர்கள் என இதற்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக இவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தப்படும்.
இந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை சக்தியுள்ளவர்களாக மாற்றுவதற்கு ஒவ்வொரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் இரண்டு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
இளைஞர் சக்தி என்ற பெயரில் இரண்டு வேலைத்திட்டங்கள் அமுல் படுதப்படும். ஒரு இலட்சம் ரூபா பெறுமதியில் இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுததப்படவுள்ளது.
அந்தப்பிரதேச செயலகப் பிரிவில் முக்கியமென இணங்காணப்படும் வேலைத்திட்டம் இதன் போது மேற் கொள்ளப்படும். அது வீதிபுனரமைப்பு புதிய வீதி நிர்மானம், சிறிய பாலங்கள் நிர்மானம் என்பன போன்ற வேலைத்திட்டங்களை மேற் கொள்ளமுடியும்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது இந்த நாட்டில் வாழுகின்ற 13வயது தொடக்கம் 29வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் நிறுவப்பட்ட பாரிய ஒரு நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தற்போது பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கீழ் இயங்கும் நிறுவனமாக உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் கணவு காண்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு எனும் தொணிப்பொருளில் எங்களது வேலைத்திட்டங்கள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறு வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக இவ்வாண்டு மேற் கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி எஸ்.அருள்மொழி, மற்றும் திருமதி ஜே.கலாராணி உட்பட அதன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்;








SHARE

Author: verified_user

0 Comments: