மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை (04) அதிகாலை காட்டு யானைகளின் தாக்குதல்களினால் 4 வீடுகள் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.
ஞாயிற்றுக் கிழமை அதிகாலை போரதீவுப்பற்று பிரதேசத்ததின் மக்கள் குடியிருப்புக்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புக்களை அழித்துள்ளதுடன் பயிர்த் தோட்டங்களையும், அழித்துவிட்டுச் சென்றுள்ளன.
இச்சம்மபவம் தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் மேற்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இச்சம்பவங்களை பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக் கிழமை அப்பகுதிக்கு நேரில் சென்று நிலமையினை பார்வையிட்டதுடன் மக்களின் கருத்துக்களையும், கேட்டறிந்து கொண்டார். இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திக்கோடைக் கிராமத்தில் 2 வீடுகளும், சுரவணையடியூற்றுக் கிராமத்தில் 2 வீடுகளும், இவ்வாறு காட்டு யானைகளினால் உடைத்துச் சேதமாக்கப் பட்டுள்ளதோடு, திக்கோடைக் கிராமத்திலிருந்த, மரவள்ளித் தோட்டம் ஒன்றும் இவ்வாறு காட்டு யானைகளினால் முற்றாக அழித்து சேதமாக்கப் பட்டுள்ளது.
இரவும், பகலும் கண்விழித்துக் கொண்டுதான் எமது வாழ்வு நகர்கின்றது. இப்பகுதியில் சுமார் 10 இற்கு மேற்பட்ட காட்டு யானைக் கூட்டம் ஒன்று திரிகின்றன. இவற்றால் எமது உடமைகளும், உயிர்களும் காவு கொள்ளப்படுகின்றன. எனவே இங்குள்ள யானைகளைப் பிடித்துக் கொண்டு சரணாலயத்தில்விட அதிகாரிகள் உடனடியாக அதிரடி நடடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நாளை திங்கட் கிழமை (05) குறித்த இடங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர். இதன் மூலம், யானைகளை வெளியேற்ற தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் என எதிர் பார்ப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை துரித கதியில் வழங்க அரசாங்க அதிபருக்கு ஆலேசனை வழங்கியுள்ளதாகவும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment