மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்திற்குட்ட வட்டியாமடு கிராமத்தில் திங்கட் கிழமை அதிகாலை (12) காட்டுயானை ஒன்று உட்புகுந்து அங்கிருந்த இரண்டு வீடுகளைத் தாக்கியுள்ளதுடன் 10 தென்னை மரங்களையும் அழித்துள்ளது.
வீட்டில் அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தனியன் காட்டு யானையொன்று தமது வளவிற்குள் புகுந்து வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் 10 தென்னை மரங்கைளயும், 10 நெல் மூட்மைடகளையும் சேதப் படுத்தியுள்ளதாக வீட்டு உரிமையாளரான எஸ்.கோபாலபிள்ளை தெரிவித்தார்.
இந்த யாட்டுயானை தாக்கிய இடத்திற்கு கிழக்கு மாகாணசபை உப்பினர் மார்க்கண்டு நடராசா நேரில் சென்று திங்கட் கிழமை பார்வையிட்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் திரியும், தனியன் காட்டு யானையைப் பிடித்துக் கொண்டு யானைகள் சரணாயலத்தில் விடுவதங்கான நடவடிக்கையையும், யானை பாதுகாப்பு வெடிகளை வழங்கவும், நடவடிக்கைகளை, முன்னெடுக்குமாறு பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கும், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment