24 Oct 2015

திருமலை மாவட்டத்திலிருந்து இளைஞர் பாராளுமன்றத்திற்காக இம்முறை 03 பேர் மாத்திரமே

SHARE
திருகோணமலை மாவட்டத்திலிருந்து இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்றத்திற்காக இம்முறை 03 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நடைபெறவுள்ள தேர்தல் தொகுதிவாரியாக நடைபெற இருப்பதனால் ஒரு தொகுதிக்கு ஒருவர் என்றடிப்படையில் திருகோணமலை மாவட்டத்திற்கு மொத்தமாக 03 பேர் மாத்திரமே தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் ஆலிதீன் அமீர் தெரிவித்தார்.
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் மாதம் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சேருவில மற்றும் திருகோணமலை ஆகிய தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன.

2015-07-30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தில் பதிவு செய்த இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்கள் இதற்காக வாக்களிக்க தகுதிபெறுவார்கள். வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் இறுதி திகதி இம்மாதம் 28 ஆம் திகதி காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையிலாகும்.

இளைஞர் கழக அங்கத்துவத்தினைப்பெற்ற 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் வேட்புமனுக்களை தாங்கள் வசிக்கின்ற பிரதேச செயலக காரியாலயத்திற்கு சென்று தாக்கல் செய்யலாம். இருப்பினும் இளைஞர் கழக அங்கத்துவம் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆகக்குறைந்த வயதெல்லை 16 ஆக காணப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் மூலமோ அல்லது மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் 026-2222034 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென்று உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவத்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: