5 Sept 2015

தமிழ் மக்களுக்குரிய தீர்வை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளின் கைகளிலே தங்கியுள்ளது-யோகேஸ்வரன். எம்.பி

SHARE
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. 1956 ஆம் ஆண்டு தமிழ்ர்களுக்குரிய தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொண்டு வந்தபோது அதனை ஐக்கிய தேசியக் கடக்சி எதிர்த்தது. 

1965 ஆம் ஆண்டு தமிழர்கள் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தைப் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்தபோது அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது. ஆனால் தற்போது இரண்டு பிரதான அரசியற் கட்சிகளும், தேசிய அரசாங்கமாக வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சியாக வந்துள்ளது.  என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தென்றல் சஞ்சிகை, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு நடாத்திய முன்னோடிப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான நடாத்திய பரிசழிப்பு விழா சனிக்கிழமை (05) மட்டக்களப்பு – கிரான்குளம் சீமூன் கார்டுன் ஹொட்டலில்  நடைபெற்றது.


இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… 

இன்றய சூழலில் எங்களிடம் இருக்கின்ற சொத்து கல்வி என்கின்ற சொத்துத்தான். இதனைப் பாதுகாத்து வளப்படுத்த வேண்டிய கடமை எங்கள் அனைவருக்கும் உள்ளது. மிக அண்மைக்காலமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் முன்னோக்கிக் கொண்டு வருகின்றது. ஏதிர்வருகின்ற ஐந்தம் ஆண்டு பலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் சித்தி பெறுவார்கள் என நான் நம்புகின்றேன்.

எமது மட்டக்களப்பு தமிழ் சமூகம் கடந்த காலங்களில் கல்வியிலே சிறந்து விளங்கியிருந்தது. மட்டக்களப்புத்தான் கல்வியில் உயர்ந்து நின்றது. ஆனால் கடந்த கால யுத்த சூழல் எமது கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யுத்த வடுக்களைச் சுமந்த வண்ணம் தற்போது மீண்டும் கல்வியில் முன்னேறிக் கொண்டு வருகின்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் எதிர்க் கட்சியாக வந்திருக்கின்றது. 1977 ஆம் ஆண்டு அ.அமிர்தலிங்கம் எதிர் கட்சி தலைவராகவிருந்த பின்னர் எங்களது தலைவர் இரா.சம்மந்தன் தற்போது எதிர் கட்சித் தலைவராக வந்துள்ளார். இது ஒரு சரித்திரமாகும்.

இரா.சம்மந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான எதிர்க்கட்சியாக இருக்க முடியாது, அவர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர் கட்சித் தலைவராக இருக்கின்றார். எனவே இலங்கையிலே இருக்கின்ற அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எதிர்க் கட்சித் தலைவராக எமது தலைவர் இரா.சம்மந்தன் விளங்குகின்றார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து, தேசிய அரசாங்கம் அமைத்துள்ளது. 1956 ஆம் ஆண்டு தமிழ்ர்களுக்குரிய தீர்வை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கொண்டு வந்தபோது அதனை ஐக்கிய தேசியக் கடக்சி எதிர்த்தது. 

1965 ஆம் ஆண்டு தமிழர்கள் ரீதியாக ஒரு ஒப்பந்தத்தைப் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்தபோது அதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதனை எதிர்த்தது. ஆனால் தற்போது இரண்டு பிரதான அரசியற் கட்சிகளும், தேசிய அரசாங்கமாக வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சியாக வந்துள்ளது. 

எமது தமிழ் மக்களுக்குரிய தீர்வை பெற்றுத்தர வேண்டிய பொறுப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முன்னனர் இந்த நாட்டில் அரசாங்கமாக திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய 2 கட்சிகளின் கைகளிலே தங்கியுள்ளது. 

பொரும்பான்மை சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் தமிழர்களுக்குரிய தீர்வுத் திடம் உருவாகும் என எதிர் பார்க்கின்றேன். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மத்தியில் எதிர்க் கட்சியாகவும், மாகாணத்தில் ஆளும் கட்சியாகவும் இருக்கின்றது. கிழக்கு மாககாணத்தில் அண்ணளவாக 39 வீதம் தமிழர்களும். முஸ்லிங்கள்  அண்ணளவாக 36 வீதமும், சிங்களவர்கள் அண்ணளவாக 23 வீதமும் உள்ளார்கள். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் இரண்டு முக்கிய அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கின்றது. 

கிழக்கு மாகாண சபைக்கு அமெரிக்க அரசாங்கத்தினால் கல்வி அபிவிருத்திகளுக்காக 430.02 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியில் அபிவிருதி செய்வதற்கு 8 பாடசாலைகளை தெரிவு செய்துள்ளார்கள் அதிலே 7 பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகளும் ஒரு பாடசாலை மாத்திரம் தான் தமிழ் பாடசாலையைத் தெரிவு செய்துள்ளார்கள். கல்வியமைச்சர் எங்கள் கட்சியிலிருக்கின்ற போதும் இவ்வாறான விடையம் நடைபெற்றிருப்பதானது மிகவும் வேதானையளிக்கின்றது. 

இந்நிதியில் 400 மில்லியனை முஸ்லிம் மக்களுக்கும் 32 மில்லியனை மாத்திரம் தமிழ் மக்களுக்கும் ஒதுக்கியுள்ளார்கள்  இது தொடர்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம், நாங்கள் மத்திய அரசில் இருந்தலும் மாகாண ஆளுனரைச் சந்தித்து இவ்விடையம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். இதனை இப்படியே நாம் விட்டு விடப் போவதில்லை. 

இதுபோன்று  அண்மையில், கிழக்கு மகாகண சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அதே சுகாதார அமைச்சினால் அம்பாறைக்கு மாற்றப்பட்டிருந்தது. கிழக்கு மகாகாணத்தில் ஆளும் கட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்து கொண்டு இவ்வாறான சம்பவங்ளை வெறுமனே பாரத்திருக்க முடியாது. 

எனவே எமது சமூகம், இன்னும் இன்னும் ஏமாழிகளாக இருக்க முடியாது. எமது மாணவர்களின் கல்வியில் மேன்மேலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு மத்திய அரசில் நாம் எதிர்க் கட்சியில் இருந்தாலும் மாகாண அரசினால் தமிழ் மக்களுக்கு நடைபெறும் அநீதிகளை வெறுமனே நாம் பார்துக் கொண்டிருக்க மாட்டோம். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: