தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளிலான எழுச்சி பேரணி கடந்த(30) புதன்கிழமை இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் முன் வாயிலில் இருந்து ஆரம்பித்து பட்டிப்பளை சந்திவரை சென்று மீண்டும் ஆலய முன்வாயிலை அடைந்தது.
இப்பேரணியில் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அ.தயாசீலன், செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment