4 Sept 2015

களுவாஞ்சிகுடிப் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அலுவலத்தினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.

SHARE
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப் படுத்தப் படவுள்ளது. 
இந்நிலையில் மட்டக்களப்பு மாட்டம் களுவாஞ்சிகுடிப் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அலுவலகத்திற்குட்டபட்ட பிரதேசத்தில் எதிர் வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரையான 4நாட் காலப் பகுதியில், தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாக, களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார், தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் வியாழக் கிழமை (03) தொடர்பு கொணடு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

எமது ழுவினர் எதிர்வரும் 10 ஆம் திதி முதல் 13 ஆம் திகதிவரையான காலப் பகுதிக்குள் களுவாஞ்சிகுடிப் பிரதேசம் முழுவதும், விஜயம் செய்யவுள்ளனர்.

எனவே எதிர் வவரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய பிரிவுக்குட்டப் அனைத்து பொதுமக்களும் தங்களது சூழலை துப்பரவு செய்து டெங்கு நுளம்புகள் வாழும் இடங்களை சுத்தம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


எமது குழுவினால் இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் சூழலை வைத்திருப்போரும், டெங்கு, குடியிருக்கும் இடங்களில் டெங்கு, நுளம்புகள் nடையாளம் காணப்பட்டாலும், யாராக இருந்தாலும் தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார், மேலும் தெரிவித்தார், 
SHARE

Author: verified_user

0 Comments: