கல்லூரியின் பழைய மாணவனும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப் பட்ட இந்த நவீன நுழைவாயில் திறப்பு விழா இன்று (28) கல்லூரியின் முதல்வர் அருட் தந்தை பிறைனர் செல்லர் தலைமையில் இடம் பெற்றது.
வைபவத்தில் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நுழை வாயிலை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் விசேட அதிதியாகவும் , கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் கௌரவ அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment