10 Sept 2015

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் செயற்திட்டம்

SHARE
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவந்த பெண் தொழில்முயற்சியாளர்களை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் இறுதி நிகழ்வு 2015.09.09 ஆந் திகதி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பணியாளர் மேம்பாட்டு நிலைய கேட்போர் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அவர்களும் விசேட அதிதிகளாக இந்தியாவின் திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் ஜி. கண்ணபிரான், இந்திய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியை என். மணிமேகலை, பெண் தொழில் முயற்சிக்கான மென்டர் (ஆநவெழச) திருச்சி மாம் கல்லூரி பேராசிரியை எம். ஹேமலதா, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு இந்திய பெண் தொழில் முயற்சியாளர்களான திருமதி எஸ். கயல்விழி, ஆஷா சுல்தானா, இன்ப வள்ளி மற்றும் ஜே. சந்தோஷ் மேரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் இறுதியில் பெண் தொழில்முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றதுடன் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை மற்றும் இந்திய கிராமிய பெண் தொழில்முயற்சியாளர்களை வாணிப மற்றும் முகாமைத்துவ ரீதியாக வலுவூட்டுவதற்காக ஆசியா பவுண்டேஷனின் நிதியுதவியுடன் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் தொழில்முயற்சியாளர்களுக்கான நிலையம், இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து முதலாம் கட்டடமாக சுமார் 300 தென்கிழக்குப் பிராந்திய  கிராமிய பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்தியது.
இதன் இரண்டாம் கட்டமாக தென்கிழக்கு, யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 25 விரிவுரையாளர்களுக்கு தொழில்முயற்சியாண்மை பயிற்சி நடாத்தப்பட்டது.
மூன்றாம் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 60 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான மேலதிக பயிற்சி வழங்கப்பட்டது. இதன் போது நேரடி கள விஜயமும் இடம்பெற்றது.
நான்காம் கட்டமாக மிகச் சிறப்பாக தங்களது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மேற்கொண்டு வரும் பெண் தொழில்முயற்சியாளர்கள் 25 பேர் தெரிவுசெய்யப்பட்டு மென்டரிங் வழிகாட்டல் பயிற்சிநெறி நடாத்தப்பட்டது. இவர்கள் இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்லவுள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிதிறமையாக தங்களது தொழில்களை செய்து வருகின்ற மருதமுனை துணியா சுவிட் சென்றர் உரிமையாளர் திருமதி எம்.எஸ். விஜிதா மற்றும் காரைதீவு பிரதேசத்தில் சுத்தமான தேங்காய் உருக்கு எண்ணெய் நிலையத்தின் உரிமையாளர் திருமதி எம். விசாலாட்சி ஆகியோர் இந்தியாவிற்கு அங்குள்ள பெண் தொழில்முயற்சியாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை தங்களிடையே பகிர்ந்துகொள்தவற்காகவும், இலங்கை இந்திய பெண் தொழில்முயற்சியார்கள் இடையே ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்காகவும் செல்லவுள்ளார்கள்.
மேலும் இச்செயற்திட்டத்தை மேற்கொள்வதற்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள். அத்தோடு முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். குணபாலன், தொழில்வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா ஆகியோர் இணைப்பாளர்களாக இருந்து செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







SHARE

Author: verified_user

0 Comments: