6 Sept 2015

ஓந்தாச்சிமடம் பொதுச் சந்தையில் சுகாதார விதி முறைக்கு முரணாக மீன் வியாபாரம் செய்த மைக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் எச்சரிக்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் பொதுச் சந்தையில் சுகாதார விதி முறைக்கு முரணாக மீன் வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் ஞாயிங்று; கிழமை (06) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொதுச் சந்தைக்கு திடிர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரதேசத்திற்கு பொறுப்பான  பொதுச் சுகாதார பரிசோகர் எஸ்.குபேரனால் இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது மீன்களை   வெறும் நிலத்தில் வைத்து வியாபாரம் செய்தமை, மற்றும் கூடுதலான மீன்களைவிற்கும் போது அனைத்தையும், குவித்து வைத்து மீன் விற்றல், பகுதி பகுதியாக விற்பனை செய்வதற்குரிய அயத்தம் இன்மை, போன்ற பல குறைபாடுகளை இனங்கண்ட சுகாதார பரிசோதகர் அவற்றினால் ஏற்படும் தீங்குகளை எடுத்துரைத்தமுடன், இப் பொதுச்சந்தையில் வெற்றிலை சாப்பிடுதல், துப்புதல், சம்பந்தமான முறைப்பாடுகளும், கிடைத்துள்ளதாகவும் இதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதுடன் இனிவருங்காலங்களில் இச்செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில், இவற்றிக்கு எதிராக நட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோகர் எஸ்.குபேரன் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: