22 Sept 2015

பழுகாமம் மாணவிகள் கபடிப்போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்.

SHARE
(திலக்ஸ்)
அகில இலங்கை பாடசாலைக் கிடையிலான கபடிப்போட்டிநிகழ்வினில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய  15 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர்வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளனர். கடந்த 12,13,14 ஆகியதினங்களில் திருகோணமலை கிண்ணியா தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 
இலங்கையின் 09 மாகணங்களிலிருந்தும்ஒவ்வொருவயதுப்பிரிவிலும் 27 அணிகள்பங்குபற்றினபலத்தசவாலுகளுக்குமத்தியில்இடம்பெற்றபோட்டியில்மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயம் 15 வயது பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கத்தினை பதக்கத்தினைப் பெற்று எமது கிழக்கு மாகாணத்திற்கு பெருமையினை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

இவ்போட்டிநிகழ்வில்பங்குபற்றியஅணிகளில்அதிகளவானவிருதுகளைப்பெற்றஅணியாககிழக்கு வடக்குதமிழ்அணிகளேயாகும். வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களையும்இபயிற்றுவிப்பாளர்களானபுவி மற்றும் கிட்டு ஆகியஆசிரியர்களைவரவேற்கும்நிகழ்வு (15.09.2015) வாகன ஊர்வலத்துடன் வரவேற்பளிக்கப்பட்டது.

பட்டிருப்பு கல்வி வலய வரலாற்றில் இதுவே முதற்தடவையாக தேசிய ரீதியில் குழு விளையாட்டில் வெற்றிபெற்றது.












SHARE

Author: verified_user

0 Comments: