அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட அன்னமலை பிரதேசத்திலிருந்து முதத்தடவையாக இம்முறை இலங்கை நிருவாக சேவை தரம் மூன்றிற்கு தெரிவாகியுள்ள சூரியகுமார் பார்த்தீபனை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அன்னமலை சக்தி கலையரங்கில் எதிர்வரும் 3ம் திகதி சனிக்கிழமை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தலைவரும் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளருமாகிய பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெறவுள்ளது.
கௌரவிப்பு நிகழ்வு
(க.விஜி, இ.சுதா)
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் பிரதம அதிதியாகவும். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித.வணிகசிங்க மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேங்களில் சேவையாற்றும் பிரதேச செயலாளர்கள் முன்னாள்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; உஸ்.புஸ்பராசா மற்றும் கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் ரீ.கஜேந்திரன் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சமுர்த்தி முகாமையாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத் தலைவர் பொன்.செல்வநாயகம் கூறினார்.
0 Comments:
Post a Comment