(ஏ.எல்.எம்.சினாஸ்)
அகிலஇலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனைக் கிளை ஏற்பாடு செய்த வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு (23.09.2015) சவளைக்கடை விநாயகர் வித்தியாலையத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். சன்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சவளைக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக அகிலஇலங்கை சோனகர் சங்கத்தின் மருதமுனைக் கிளைத் தலைவர் தேசமானி அப்துல் கையும் பங்குபற்றினார். சங்கத்தின் ஆலோசகர்களான தேசபந்து டாக்கடர் யு.எல்.ஏ.அஸீஸ-ஜெ.பி, அல்-ஹாஜ் ஏ.ஏ.மீராமுகையதீன்-ஜெ.பி ஆகியோரும் கலந்து கொண்டு இங்கு உரை நிகழ்தினர்.
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. சகோதர இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு முஸ்லிம் அமைப்பொன்று தேவையறிந்து சேவையாற்றியதை ஊர் மக்கள் பாராட்டிப் பேசினார்கள். இதுபோன்ற முன்னுதாரண செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.

0 Comments:
Post a Comment