28 Sept 2015

விளையாட்டு மைதானங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டார் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்

SHARE
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக அபிவிருத்தி
செய்யப்படாமல் உள்ள விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வது குறித்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத் துறை பிரதியமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.
கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தின்  அபிவிருத்தி தொடர்பாக அமைச்சரின் பணிப்புரையின் கீழ் அமைச்சின் உயர் அதிகாரிகள் விஜயம் செய்து பார்வையிட்டனர். கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை சந்தாங்கேணி, மருதமுனை மசூர் மௌலானா, நற்பிட்டிமுனை ஆகிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையினை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

இதற்கான கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகரசபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப், ஏ.ஆர்.அமீர், எம்.எம்.முஸ்தபா, ஏ.எம்.பறக்கதுள்ளா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.இராஜதுரை,

ஓய்வுபெற்ற விளையாட்டு விரிவுரையாளர் எம்.எம்.முஸ்தபா, ஓய்வுபெற்ற மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எம்.நபார், உள்ளிட்ட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பொது விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி தொடர்பாகவும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயம் செய்தார்.

சாய்ந்தமருது பொது விளையாட்டுமைதானம், சம்மாந்துறை பொது விளையாட்டுமைதானம், பொத்துவில் பிரதேசத்தின் மைதானம் போன்றவற்றையும் அமைச்சர் பார்வையிட்டதோடு அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.


SHARE

Author: verified_user

0 Comments: