அம்பாறை மாவட்டத்தில் சமூகமட்ட சிறுவர்; விபத்துகளை குறைக்கும் செயற்றிட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சர்;வோதய நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக சர்;வோதய நிறுவனத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான திட்ட இணைப்பாளர் எஸ்.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் சமூகமட்ட சிறுவர் விபத்துகளை குறைக்கும் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டம், அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. நாவிதன்வெளி, இறக்காமம், சம்மாந்துறை, உகண, தமண, பதியத்தலாவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment