18 Sept 2015

வாகரைப் பிரதேச சபைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜையம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரைப் பிரதேச சபைக்கு   நேற்று வியாழக்கிழமை (17) கிழக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜையம் ஒன்றினை மேற்கொண்டார். வாகரைப் பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள குறைகள் மற்றும் பின் தங்கிய பிரதேசமாக இருக்கும் அப்பிரதேசத்தின் குறைகளைக் கேட்டறியும் நோக்கில் அங்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குறிப்பிட்ட விஜையத்தினை மேற்கொண்டார்.
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாநகரசபை மற்றும்இ நகரசபைகள்இ பிரதேச சபைகளுக்கும் விஜையம் செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சின் குழுவினர் வாகரைப் பிரதேச சபைக்கு விஜையம் மேற்கொள்ள முடியாமல் இருந்தனர். அதன் காரணமாக  நேற்று வியாழக்கிழமை  குறிப்பிட்ட பிரதேச சபைக்கு விஜையம் மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்தனர்.

இதன்போது  கிழக்கு மாகாண முதலமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்   

கிழக்கில் எந்த மூலையிலும் எந்த ஒரு பொதுமகனும் நமது சபைகளைப் பற்றிஇ அங்கு நடைபெறும் மக்கள் சேவை இ அல்லது திண்மக்கழிவகற்றல்இ வெளிச்சம் பொருத்துதல்இ குடிநீர் வழங்கல்இ வடிகான் துப்பரவின்மை போன்ற எந்த குறைகளையும் கூறாத நிலைமைக்கு ஒவ்வொரு பிரதேச சபைகளும் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும். 
யாருக்கும் அச்சப்பட்டு சபைகளின் நடவடிக்கைகளை முடக்கிவிட முடியாது. சபை நடவடிக்கைகள் தொடர்பாக அதிக அக்கரறையுடன் அனைத்து விடையங்களையும் கவனிக்க வேண்டியவர் சபைகளின் செயலாளர்கள் அவர்களிடமே மக்களின் குறைகள் பற்றி விசாரிக்கப்படும். எனவே ஒவ்வொரு சபை நடவடிக்கைகளும் மிகக் கவனமாக செய்ய வேண்டும். சபைகளுக்குத் தேவையான விடையங்களை மாகாண சபையுடன் தொடர்பு கொண்டு கேட்டுப்பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு சபைகளின் செயலாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை வைத்துக்கொண்டு உங்கள் கடமைகளை தைரியாமகச் செய்ய வேண்டும். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. சரியான கடமை செய்யவர்களுக்கான நடவடிக்கையினை உடனே எடுக்க வேண்டும் அப்படி செய்கின்றபோதுதான் பொதுமக்களுக்கான சரியான சேவைகளும் அவர்களுக்குச் சென்றடையும் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இவ்விஜையத்தின் போது முதலமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரட்ணம்இ மற்றும் அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்இ பிரதிச் செயலாளர் ராபிஇ மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: