17 Sept 2015

பட்டிருப்பு பாலம் சேதமமைந்து ஒருவருடமாகியும் இதுவரையில் புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கவில்லை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் கடந்த காலத்தில் நூற்றுக்கு நூறு வீதம் யுத்த சூழல் பிரதேசமாக்கக் காணப்பட்டதே படுவான்கரைப் பகுதியாகும். இப்பிரதேசத்திற்கு மட்டு நகரிலிருந்து செல்ல வேண்டுமாயின், மட்டக்களப்பு வாவியைக் கடந்தே செல்ல வேண்டும். மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நிருமாணிக்கப் பட்டுள்ள வலையிறவுப் பாலம், மண்முனைப் பாலம், அம்பிளாந்துறை ஓடத்துறை, பட்டிருப்பு பாலம், மற்றும் மண்டூர் ஓடத்துறை ஆகியவற்றினூடாகவே செல்ல வேண்டும். 
மேற்குறிப்பிட்ட போக்குவரத்து மர்க்கங்களில், மிகவும் பிரதானமாகக் காணப்படுவது பட்டிருப்பு பாலமாகும். இப்பாலத்தில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு பகுதியை ஊடறுத்துச் செல்லும் மட்டக்களப்பு, வாவிக்குக் குறுக்காக இடப்பட்டுள்ள பாலத்தினூடாகவேதான் இதுவரையில் இப்பிரதேச மக்களின் படுவான்கரைப் பகுதிகான போக்குவரத்துகள் இடம்பெற்று வருகின்றன.

இருந்த போதிலும் கடந்த ஒரு வருட காலமாக பட்டிருப்பு பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதாக தெரிவித்து, பாலத்தின் ஒருபகுகுதியை போக்குவரத்துக்குப் பயன்படுத்தாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாரம் குறைந்த வாகனங்கள்மாத்திரம், இப்பாலத்தினுடாக பயணிக்க மடியும் எனவும், விளம்பரங்கள் இடப்பட்டுள்ளன. 

இருந்த போதிலும் இப்பாலத்தினூடாக மக்கள் அச்சத்துடனேயே பயணித்து வருவதாகவும் பிரயாணிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஒருவருடமாகியும் சம்மந்தப்பட்ட அதிகாரியக் இப்பாலத்தினைப் புணரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லை என மக்கள் அங்கலாய்கின்றனர்.

1960 ஆம் ஆண் கட்டப்பட்ட இப்பழம் பெரும் பாலத்தின் ஒரு பகுதியில் கீழ்ப் பகுதியிலுள்ள கம்பிகள், செயலிழந்துள்ளன. இப்பாலத்தினை புணருத்தாருணம் செய்வதற்கு உரிய ஆரம்பக்கட்ட ஆய்வுகளும், திட்ட வரைபுகளையும், நாம் எனது தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பியுள்ளோம். தலைமைக் காரியாலய அதிகாரிகளும், நேரடியாக வந்து இப்பாலத்தினை பார்வையிட்டுச்  சென்றுள்ளார்கள். ஆனால் இதற்குரிய நிதி ஒதுக்கீடுகள் இன்னும் வந்து சேரவில்லை. நிதி ஒதுக்கீடு வந்ததும் நாம் இப்பாலத்தின் திருத்த வேலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என கிழக்கு மாகா வீதி அபிவிருதி அதிகார சபையின் பணிப்பாளர் வை.தருமரெத்தினத்திடம், இன்று புதன் கிழமை (16) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.

இப்பாலதின் ஒரு பகுதியினூடாகச் செல்ல முடியாது என தடை ஏற்படுத்தியுள்ளதனால்  மக்கள் எமக்கு தொடர்ந்தும் முறையிட்டு வருகின்றார்கள் இப்பாலத்தை புணரமைப்பதற்கும் நாம் தயாரகவுள்ளோம், உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதும் இதற்குரியவேலைகள் ஆரம்பிக்கப்படும், எனவும்  பணிப்பார் மேலும் தெரிவித்தார்.

எது எவ்வாறு அமைந்தாலும், இப்பாலத்தினூடாகத்தான் மட்டக்களப்பு மாட்டத்தின் பெரும் பகுதியாகக் காணப்படும படுவான்கரைப் பகுதிக்கு மக்கள் நாளாந்தம் போகுவரத்துச் செய்கின்றனர். தினமும் மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், என ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இப்பாலத்தின் புணரமைப்புக்கள் குறித்து அரசியல்வாதிகளும், உரிய அமைச்சு மட்டத்தில் குரல் கொடுக்க வேண்டும், அப்போதுதான் இப்பாலத்தின் அபிவிருத்தி துரிதகரியில் முன்நெடுக்கப்படும் என பொது மக்கள் அங்கலாய்கின்றனர். 
  








SHARE

Author: verified_user

0 Comments: