17 Sept 2015

செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத பெருமானுக்கு மகா கும்பாபிசேகம்

SHARE
மட்டக்களப்பு செங்கலடி நகரினில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுதப் பெருமானுக்கு மகா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெறவிருக்கின்றது.
மகா கும்பாபிசேகப் பெருவிழாவின் கிரியாகால  விசேட வழிபாடுகள் இன்று நடைபெற்றதுடன்,  எதிர்வரும் ஆவணி 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆவணி முப்பதாவது நாள் நிறைவுபெறவுள்ளது.கும்பாபிசேக நிகழ்வுகள் அனைத்தும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியும் சபரிமலைக் குருமுதல்வருமாகிய ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ 
சிவாச்சார்யார் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.
ஆவணி 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாடு மகா கணபதிஹோமம், திரவிய சுத்தி, சாந்தி ஹோமம்  போன்ற பலமுக்கிய கிரியைகள் நடைபெற்று,
ஆவணி 28ம் நாள் திங்கட்கிழமை கிராமசாந்தி, வாஸ்த்துசாந்தி, ஸ்ரீ சண்முக ஹோமம், யந்திரஸ்தாபனம் போன்ற பல முக்கிகிரியைகள் நடைபெற்று மறுநாள் காலை ஆவணி 29ம் நாள்  செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் பிற்பகல் 4மணிவரை உள்ள காலப்பகுதியில் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஆவணி 30ம் நாள் புதன்கிழமை அன்று திருதியை திதியும்  சித்திரை நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் கூடிய காலை 10மணி முதல் 11மணி 47 நிமிடம் வரையுள்ள விருச்சிக லக்கின சுபமுகூர்த்த வேளையில் சித்திரவேலாயுதப் பெருமானுக்கு நவகுண்டபஸ மகா கும்பாபிசேகப் பெருவிழா நடைபெறும்.
இக் கும்பாபிசேக நிகழ்வுகளை தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: