28 Sept 2015

அமெரிக்கா கொண்டு வந்துள்ள அறிக்கையில் திருத்தங்களோ மாற்றங்களோ செய்யக்கூமடாது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவனமாகவுள்ளது.

SHARE
எமக்கு துன்பியலை ஏற்படுத்தியவர்களுக்கு  சர்வதேச நிபுணர்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம். உள்ளக விசாரணை என்கின்ற போர்வையில் வரும் எவருக்கும் ஆதரவு தெரிவிக்கவோ அல்லது இடமனிக்கவோ மாட்டோம். இதில் நாம் உறுதியாகவுள்ளோம்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள அறிக்கையில் திருத்தங்களோ மாற்றங்களோ செய்யக்கூடாது என்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கவனமாகவுள்ளது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வு வியாழக்கிழமை (24) எருவில் மட்.கண்ணகி வித்தியத்தில் நடைபெற்றது.  

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

கடந்த 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியும், அதற்கு பின்ன வந்த காலப் பகுதியும், அரசியல்வாதிகளின் பின்னால் துப்பாக்கிகள் தொடர்ந்த காலம். அந்த இக்கட்டான காலப் பகுதியில் சேவையாற்றியவர்கள்தான் எமது கட்சியின் பட்டிருப்புத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, மற்றும், பா.அரியநேத்திரனுமாகும். அவர்கள் இந்த மண்ணுக்காக ஆற்றிய சேவையினை மறக்க முடியாது.

எமது மக்கள் பல அபிவிருத்திக் குறைபாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் ஏனைய இன மக்கள் பல அபிவிருத்தி கண்டு வருகின்றன. எமது உரிமைக்கு முன்னுரிமை வழங்கி வருவதனால் மக்களின் அபிவிருத்தியில் பின்னடைவு காணப்பட்டு வருகின்றன. 

எப்படி அபிவிருத்திகள் நடைபெற்றாலும் அவற்றை அனுபவிக்கின்ற உரிமை வேண்டும். இந்த உரிமைப் போராட்டத்திற்காகத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. 

சர்வதேச விசாரணை வரும் நிலையிலுள்போது உள்ளக விசாரணை என்கின்ற விடையத்தைக் காட்டி சர்வதேச விசாரணையைத் திசை திருப்புகின்ற நிலமையைக் காணக்கூடியதாகவுள்ளது. 

எமது மக்களுகுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறைப்பதற்று யாருக்கும் நாம் இடமளிக்க முடியாது. இதற்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடியது சர்வதேச விசாரணைதான். உள்ளக விசாரணைகளால் கடந்த காலங்களில் ஏமாற்றப் பட்டிருக்கின்றோம். உள்ளக விசாரணைகளின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  

கற்றுக்கொண்ட பாட்ங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைக்கூட அமுலப்படுத்த முடியாத கடந்த அசாங்கத்திலிருந்தவர்கள் தற்போது இந்த நல்லாட்சி அரசிலும் உள்ளார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு அழைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைப்பதற்கு இந்த நால்லாட்சி என்று சொல்கின்ற அரசு முற்படுமானால், அது பாரிய பின்விளைவுகளை இந்த நாட்டில் ஏற்படுத்தும். 

எமக்கு துன்பியலை ஏற்படுத்தியவர்களுக்கு  சர்வதேச நிபுணர்கள் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம். உள்ளக விசாரணை என்கின்ற போர்வையில் வரும் எவருக்கும் ஆதரவு தெரிவிக்கவோ அல்லது இடமனிக்கவோ மாட்டோம். இதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

அமெரிக்கா கொண்டு வந்துள்ள அறிக்கையில் திருத்தங்களோ மாற்றங்களோ செய்யக்கூடாது என்பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கவனமாகவுள்ளது. என அவர் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: