12 Sept 2015

அதிபர்கள் அரசியல் வாதிகளுக்கு பின்னால் செல்லாது மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் -முதலமைச்சர் காட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டக் களப் பயணத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று  நான்காம் நாளான வெள்ளிக் கிழமை (10)  மட்டக்களப்பு மத்திய வலயகல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களைச் சந்திக்கும் கூட்டமொன்று ஏறாவூர் அலிகார் மாகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்திய கல்விப்பணிப்பாளர்  சேகு அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நாஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிஷாம் வலயத்தின் சகல பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டு பாடசாலைகளில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள் தேவைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குப் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் மேற்கண்டவாறு உரை நிகழ்த்தினார்.

இன்று அதிக முறைப்பாடுகள் பாடசாலைகளின் சில அதிபர் ஆசிரியர்களைப் பற்றியதாகவே வந்துகொண்டிருக்கிறது. அதிபர் ஆசிரியர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்கின்றனர் அவர்களின் செயலால் மாணவர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது அதனை நிறுத்த வேண்டும். அத்துடன் அதிபர் தரமில்லாத சிலர் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிபர் அந்தஷ்துள்ள அதிபர்கள் இன்றும் ஆசிரியர்களாகவே கடமையாற்றுகின்றனர். 

இம்முறையினை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் சொல்லுமளவுக்கு இன்றைய கல்வி நடவடிக்கைகள் சென்று கொண்டிருப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியான நிலமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் நான் பேசவிருக்கிறேன் எனவே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குரிய பாடசாலைகளின் நிலமைகளை உடனடியாக மாற்றியமைக்க மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஷாமிடம் கட்டாயம் உத்தரவாகத் தெரிவிக்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இன்று அரசியல் வாதிகளுக்கு பின்னால் பாடசாலை அதிபர்கள் செல்வதன் காரணம் ஏன் என்பது எனக்குப்புரியவில்லைஇ சரியான அதிபராக தனது கடமைகளைச் செய்கின்றபோது அந்த அதிபர் எந்த அரசியல் வாதிக்கும் அச்சமில்லாத ஒருவராக இருக்க முடியும்.

தலைநிமிர்ந்து பேசும் திறன்கொண்டவராகவும் இருக்க முடியும். மாறாக அரசியல் வாதிகளின் வீடுதேடிச் சென்று அங்கே மணிக்கணக்காகவும் நாட்கணக்காகவும் தங்கியிருந்து தனது பதவி நிலையை விட பெரிய இடம் கேட்கும் போதுதான் இப்படியான பிரச்சனைகள் வருகிறது. 

எனவே இப்படியானவர்களுக்கு  எந்தவித பாரபட்சமும் காட்டப்படமாட்டாது. எனவே அதிபர் பதவி நிலையில் இல்லாது அதிபர்களாக கடமைபுரியும் அனைவரின் இடத்துக்கும் உரிய தகமையுடையவர்கள் அதிபர்களாக நியமிக்கப்படவேண்டும். 

மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை வழங்கி கல்வி வழர்ச்சியை மேம்படுத்த அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டும். அதிபர்இ ஆசிரியர்கள் அதற்காக தங்களை அற்பணித்து கல்விச்சேவையைத் திறன்படச்செய்ய வேண்டும்.

கடமைகளைச் சரியாகச் செய்கின்றபோது இடையூறாக ஏற்படும் தடங்களை உடனடியாக உடைத்தெறிய நான் ஒருபோதும் பின்னிற்க மாட்டேன். என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதுரையில் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: