10 Sept 2015

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் கொடியேற்றத் திருவிழா

SHARE
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் கொடியேற்றத் திருவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள திருவிழா பத்து நாட்கள் திருவிழாவான நடைபெற்று எதிர்வரும் 17ம் திகதி பாசிக்குடா வங்கக் கடலில் தீர்த்தமாடும் நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.
12ம் திகதி சனிக்கிழமை மாம்பழத் திருவிழா, 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கற்பூரத் திருவிழா, 14ம் திகதி திங்கள்கிழமை தீபத்திருவிழா, 15ம் திகதி சனிக்கிழமை வேட்டைத் திருவிழா, 16ம் திகதி தேரோட்டம், மறுநாள் காலை தீர்த்த உற்சவம் என்பன நடைபெறவுள்ளது.
தேரோட்டத் திருவிழாவானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வாழைச்சேனை பேச்சியம்மன் அலுய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு பகுதி, கல்குடா வீதி வழியாக சென்று ஆலயத்தை சென்றடையவுள்ளது.
மஹோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ.நா.ஈஸ்வரநிவாசக் குருக்கள் தலைமையில் கிரியைகள் யாவும் நடைபெற்றது. இதன்போது பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆலய உற்சவ காலங்களில் தினமும் மாலை சமய சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
temple (1)
temple (2)
temple (3)
temple (4)
temple (5)
SHARE

Author: verified_user

0 Comments: