10 Sept 2015

தீர்வை இப்போதே பெற்றுக்கொள்ளாவிட்டால் இனியும் சந்தர்ப்பம் கிடைக்காது

SHARE
நாட்டில் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இனப்பிரச்சினைக்குதீர்வு காணப்படாவிட்டால் இனி எக்காலத்திலும் இதற்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.கோரளைப்பற்று பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் நாட்டில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டு, அதில் எதிர்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்துள்ளனர் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த அளவிற்கு இந்த நாட்டு ஆட்சியாளர்களின் உள்ளங்கள் மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.இப்படியான ஒரு தருணத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் இனி எக்காலத்திலும் இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: